| அரவக்குறிச்சியில் இருந்து தென்னிலைக்கு டவுன் பஸ் வசதி: மக்கள் எதிர்பார்ப்பு Dinamalar
அரவக்குறிச்சியில் இருந்து தென்னிலைக்கு டவுன் பஸ் வசதி: மக்கள் எதிர்பார்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
10:06

கரூர்: அரவக்குறிச்சியில் இருந்து ஒத்தமாந்துறை வழியாக தென்னிலைக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் இருந்து கரூர், மூலனூர், கன்னிவாடி, தாராபுரம், ஈசநத்தம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அரவக்குறிச்சியில் இருந்து ஒத்தமாந்துறை வழியாக, தென்னிலைக்கு டவுன் பஸ்கள் செல்வதில்லை. இதனால், ஊத்தூர், மாலமேடு, தண்ணீர் பந்தல், அரிக்காரன் வலசு, கள்ளமடைபுதூர் பிரிவு, பள்ளப்பட்டி பிரிவு, ஒத்தமாந்துறை, சின்ன தாராபுரம், தென்னிலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள், மாணவ, மாணவியர், அரவக்குறிச்சிக்கு எளிதாக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் உள்ளவர்கள், சின்னதாரா புரம், ராஜபுரம் வழியாக, அதிகப்படியாக, 15 கி.மீ., தூரம் பயணம் செய்து, அரவக்குறிச்சிக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால், அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி பிரிவு, ஒத்தமாந்துறை வழியாக தென்னிலைக்கு டவுன் பஸ்கள் இயக்க வேண்டியது அவசியம்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X