| அறிவிப்புக்கு முன்பே பிரசாரம் துவக்கம்: கரூரில் களை கட்ட துவங்கியது உள்ளாட்சி தேர்தல் Dinamalar
அறிவிப்புக்கு முன்பே பிரசாரம் துவக்கம்: கரூரில் களை கட்ட துவங்கியது உள்ளாட்சி தேர்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
10:06

கரூர்: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, கரூர் மாவட்ட பஞ்சாயத்துகளில், வேட்பாளர்களின் பிரசாரம் களை கட்டத் துவங்கியுள்ளது.


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இதையடுத்து, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், விருப்ப மனு வாங்கத் துவங்கியுள்ளன. கிராம பஞ்சாயத்துகளில், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், பஞ்., உறுப்பினர் என நான்கு ஓட்டுகளை அளிக்க வேண்டும். இதில், மாவட்ட, யூனியன் கவுன்சிலர்களை தவிர மற்ற பதவிகளுக்கு கட்சி சார்பின்றி போட்டி நடக்கும், கரூர் மாவட்டத்தில், எட்டு யூனியன்களில், 157 பஞ்சாயத்துகள் உள்ளன.


தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், பல பஞ்சாயத்துகளில் தலைவர் பதவிக்கு பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தூர் பூலாம்பாளையத்தில், பஞ்சாயத்து தலைவருக்கு செல்லை சிவா என்பவர் பிரசாரத்தை தொடங்கி விட்டார். தி.மு.க., சேர்ந்த, இவர், 2001ல், பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக, 2011ல், பஞ்சாயத்து துணைத் தலைவராக இருந்துள்ளார். தற்போது, 'விடுப்பட்ட பணி தொடர, எனக்கு ஒதுக்கப்படும் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்,' என, அச்சிட்ட துண்டு பிரசுரத்தை வீடு, வீடாக வினியோகத்து பிரசாரம் செய்து வருகிறார். இதுபோல, தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூக்கணாங்குறிச்சி பஞ்சாயத்து தலைவருக்கு, தம்மாநாயக்கன்பட்டியை சேர்ந்த லிங்கம் என்பரும் துண்டுப் பிரசுரம் வாயிலாக பிரசாரம் செய்து வருகிறார். இது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X