கரூர்: தமிழ்நாடு சத்துணவு சங்க, கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் ராஜேந்திரன் தலைமையில், கவன ஈர்ப்பு பேரணி கரூரில் நடந்தது. அதில், 36 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக, ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வூதியம் குறைந்தபட்சம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். உணவு மானியத்தை, ஐந்து ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில செயலாளர் மலர்விழி, மாவட்ட செயலாளர் சுந்தரம், அரசு மருந்தாளுனர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகா விஷ்ணன் உள்பட, பலர் பேரணியில் பங்கேற்றனர்.