கரூர்: கரூர் அருகே, அரசு பள்ளி ஆசிரியை, குழந்தையுடன் மாயமானார். தான்தோன்றிமலை சிவசக்தி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 31. தனியார் நிறுவன ஊழியர். இவர் மனைவி லாவண்யா, 27; தோகைமலை, பில்லூர் அரசு பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மூன்று வயது மகளுடன், லாவண்யாவை கடந்த, 11 முதல் காணவில்லை என, கணவர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் படி, தான்தோன்றிமலை போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.