கற்கள் பெயர்ந்த தார்ச்சாலை வாகன ஓட்டிகள் அவதி | கரூர் செய்திகள் | Dinamalar
கற்கள் பெயர்ந்த தார்ச்சாலை வாகன ஓட்டிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
10:11

கிருஷ்ணராயபுரம்: மத்திப்பட்டியில், தார்ச்சாலை பல இடங்களில் மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த மத்திப்பட்டி பகுதிக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமானோர் நகர்புற நிறுவனங்களுக்கு பணிக்கு செல்கின்றனர். இந்நிலையில், சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் தொழிலாளர்கள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மழை பெய்யும்போது, சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள், சறுக்கி விழுகின்றனர். இந்த சாலையை சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X