கரூர்: கரூர் அருகே எல்.என்.எஸ்., போஸ்ட் பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அதில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர் பல இடங்களில் இடிந்து காணப்படுகிறது. இதனால், குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கிறது. மழை பெய்யும்போது, மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து சாலையில் செல்வதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், பல தெருக்களில், சாக்கடை வசதி இல்லாமல், வீட்டுக்கு அருகே, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. உடைந்த தடுப்பு சுவரை சரி செய்வதோடு, சரியான கழிவுநீர் வடிகால் வசதி செய்ய வேண்டும்.