ப.வேலூர்: பா.ம.க.,சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி, ப.வேலூர் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.ரமேஷ் தலைமை வகித்தார். பயணிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து மக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். பின்னர், சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நகர செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.