ராசிபுரம்: ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி அடுத்த தனியார் கல்லூரி அருகே ஓடை உள்ளது. இதில், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் குப்பையை குவித்து அடிக்கடி தீ வைத்து விடுகின்றனர். சாலையோரமே உள்ள ஓடையில் தீ வைப்பதால், சாலை முழுவதும் புகை மூட்டமாக மாறிவிடுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதேபோல், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகளும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையோரம் குப்பை குவித்து, எரிப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.