| வீசாணத்தில் சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி Dinamalar
வீசாணத்தில் சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 நவ
2019
10:23

நாமக்கல்: நாமக்கல் அடுத்த வீசாணத்தில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி சிதிலமடைந்துள்ளதால், இடிந்து விழும் நிலையில் உள்ளது. நாமக்கல் ஒன்றியம், வீசாணம் ஊராட்சியில் குடித்தெரு, தேவேந்திரர் தெரு, கோட்டாந்தோட்டம், ஆதிதிராவிடர் தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அங்கிருந்து வேட்டாம்பாடி செல்லும் சாலையில் ஆதிதிராவிடர் தெருவில், 2013ல் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. தொட்டியை முறையாக சுத்தம் செய்யாமல் தொடர்ந்து தண்ணீர் ஏற்றப்படுவதால், சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X