அரசு அலுவலர்களுக்கு 88 வீடுகள் ரூ.24 கோடியில் ஏற்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
01:25


திண்டுக்கல்,:திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.24 கோடியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் அரசு அலுவலர்களுக்கு 88 வீடுகள் கட்டப்பட உள்ளது.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் எதிரில் கடந்த 1984 ல் வீட்டு வசதி வாரியம் சார்பில் அரசு அலுவலர்களுக்காக 72 வீடுகள் கட்டப்பட்டது. காலப்போக்கில் வீடுகள் சிதிலமடைந்து தங்குவதற்கு லாயகற்று போனது. அந்த வீடுகளில் குடியிருந்த அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அவதிப்பட்டனர். வீடுகளை இடிக்க முடிவுசெய்த வீட்டு வசதி வாரியம், அங்கு குடியிருந்தவர்களை காலி செய்தது.வீடுகள் காலியானதும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அக்கட்டடங்கள் இடிக்கப்பட்டன.பின் அந்த இடத்தின் மொத்த பரப்பளவு, ரோடு வசதி, மரங்கள், கட்டடங்கள் அமையவுள்ள பகுதிகள் தொடர்பாக நவீன கருவிகள் மூலம் சர்வே எடுக்கப்பட்டது. கட்டடம் கட்டுவது தொடர்பாக அரசிடம் திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.88 வீடுகள்அரசு அலுவலர்களுக்கான புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு முதற்கட்டமாக ரூ.24 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. 'குருப்-ஏ' ல் மூன்று படுக்கை அறை, ஒரு சமையலறை, ஒரு ஹால் வசதி, 'குரூப்-பி' ல் 2 படுக்கை அறை, ஒரு சமையலறை, ஒரு ஹால், 'குரூப்-சி'ல் ஒரு படுக்கையறை, சமையலறை, ஹால் வசதி என 3 பிரிவுகளில் மொத்தம் 88 வீடுகள் கட்டப்பட உள்ளது. குடியிருப்புகளுக்கு திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் மற்றும் பஸ்ஸ்டாண்ட் எதிரே என இரு பாதைகள் அமைக்கப்பட உள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X