கோபால்பட்டி, :சாணார்பட்டி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் ராமராசு தலைமையில் நடந்தது. மாநில ஜெ., பேரவை இணை செயலார் கண்ணன், நத்தம் ஒன்றிய செயலாளர் ஷாஜகான் முன்னிலை வகித்தனர்.அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் விஸ்வநாதன் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களை கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களே முடிவு செய்யலாம். தமிழக மக்கள் லோக்சபா தேர்தலில் பிற கட்சிக்கும், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கும் ஓட்டளித்துள்ளனர்.உதாரணமாக நிலக்கோட்டை தொகுதியில் லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுக்கும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கும் ஓட்டளித்துள்ளனர். தமிழகத்தை அ.தி.மு.க., தான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். தி.மு.க.,வையும் ஸ்டாலினையும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். ஸ்டாலின் மீது தி.மு.க., வினரே நம்பிக்கை இழந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். நத்தம் நகர செயலாளர் சிவலிங்கம், சுப்பிரமணி, ஜெயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.