பழநி, திண்டுக்கல்லில் நடந்த வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பு போட்டியில் பழநி ஹயக்ரீவர் மெட்ரிக் பள்ளி மாணவர் அஸ்வத்தாமன் ஜூனியர் பிரிவில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். இதே பிரிவில் ஜிஸ்னுபட், பரத்குமார் 2ம் இடமும், சீனியர் பிரிவில் சக்திவேல், பாலமுருகன் 2ம் இடம் பெற்றனர். அவர்களை பள்ளி முதல்வர் தாம்பரசெல்வி, செயலர் சவுந்தரராஜன், நிர்வாக அறங்காவலர் வஞ்சியப்பன் பாராட் டினர்.