| திருடிய நகையை பங்கிடுவதில் மோதல் வெட்டுப்பட்ட வாலிபருக்கு, 'காப்பு' Dinamalar
திருடிய நகையை பங்கிடுவதில் மோதல் வெட்டுப்பட்ட வாலிபருக்கு, 'காப்பு'
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
02:11

கொரட்டூர்:திருடிய நகையை விற்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், ரயில் நிலையத்தில் வெட்டுப்பட்ட வாலிபர் கைதானார்.



அம்பத்துார் அடுத்த கொரட்டூர், கோபால் நாயக்கர் நகரைச் சேர்ந்தவர், மகேஷ்குமார்,

37; டூ - வீலர் பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். 3ம் தேதி, பாடிக்குப்பத்தில் உள்ள, சித்தப்பா வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார்.பின் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 4 சவரன் நகை திருடு போயிருந்தது. கொரட்டூர் போலீசார் விசாரித்தனர்.



இந்த நிலையில், 11ம் தேதி இரவு, கொரட்டூர் ரயில் நிலையத்தில், வாலிபர் ஒருவரை, இருவர் வெட்டிய சம்பவம் பரபரப்பானது. பெரம்பூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வரும் முன், மூவரும் தப்பினர்.இது குறித்து, புகார் ஏதும் இல்லை என்பதால், அவர்கள் தொடர்ந்து விசாரிக்கவில்லை.ஆனால், அம்பத்துார் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.



இதில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, வில்லிவாக்கம், பாரதி நகரைச் சேர்ந்த சூர்யா, 22, என்பவர் சிக்கினார்.இவர், கொரட்டூர் மகேஷ்குமார் வீட்டில் நகை திருடியது உறுதியானது. திருடிய நகையை, வில்லிவாக்கம் மதன், அயனாவரத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் மூலம் விற்க முயன்றார்.இதில் ஏற்பட்ட பிரச்னையால், அவர்கள், கொரட்டூர் ரயில் நிலையத்தில், சூர்யாவை வெட்டியது தெரிய வந்தது. சூர்யாவை கைது செய்த போலீசார், மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X