போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
02:12

தச்சுத்தொழிலாளிக்கு, 'போக்சோ'



கிண்டி: தரமணி, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன், 40; தச்சுத்தொழிலாளி. இவர், தன் உறவுக்கார, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து, லட்சுமணனை நேற்று, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.



காவலரிடம் மொபைல், 'அபேஸ்'


புழல்: குன்றத்துாரைச் சேர்ந்தவர் நாராயணன், 20. ஆயுதப்படை காவலரான இவர், புழல் மத்திய சிறையில், பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, மற்றொரு காவலர் நிர்மல் என்பவருடன், இரு சக்கர வாகனத்தில் சென்றார். புழல், ரெட்டேரி பாலம், அணுகு சாலையில் சென்றபோது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், நாராயணன் கையில் இருந்த, மொபைல் போனை பறித்து தப்பினர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.



பெண்ணிடம் நகை பறிப்பு


மாதவரம்: கொளத்துார், அரிதாஸ் நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 44. இவர், மாதவரம், கில்பன் நகர் அருகே உள்ள, தனியார் நிறுவனத்தில், கணக்காளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, இரு சக்கர வாகனத்தில், 200 அடி சாலை வழியாக, வீட்டிற்கு சென்றார்.மாதவரம் ரவுண்டானா மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், விஜயலட்சுமியின், 5 சவரன் தாலி செயினை பறித்து தப்பினர்.இதில், நிலைதடுமாறி விழுந்ததில், விஜயலட்சுமிக்கு காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். செயின் பறிப்பு ஆசாமிகளை, மாதவரம் போலீசார் தேடி வருகின்றனர்.



வழிப்பறி திருடன் அகப்பட்டான்


அம்பத்துார்: அம்பத்துார் தொழிற்பேட்டையைச் சேர்ந்த, தொழிலதிபரிடம், 2012ல், ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகள், துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர். இந்த வழக்கில், வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த கார்த்திகேயன், 36, என்பவர் சிக்கினார்.சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமினில் விடுதலையான இவர், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், அம்பத்துார் அருகே கார்த்திகேயன் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.



ஆசிரியையிடம் செயின் பறிப்பு


டி.பி.சத்திரம்: புழல், மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் உஷா, 56; தனியார் பள்ளி ஆசிரியை. இவர், நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில், நியூ ஆவடி சாலை வழியாக வீட்டிற்கு சென்றார். அப்போது பின்னால், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது கழுத்திலிருந்த, 3 சவரன் செயினை பறித்து தப்பினர். டி.பி.சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X