| பணி நியமனத்தில் 'தில்லுமுல்லு':துப்புரவு ஊழியர் புகார் மனு Dinamalar
பணி நியமனத்தில் 'தில்லுமுல்லு':துப்புரவு ஊழியர் புகார் மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
02:15

அவிநாசி:'துப்புரவு ஊழியர் பணிநியமன விவகாரத்தில் விதிமீறப்படுகிறது,' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும், 130 துப்புரவு பணியாளர்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர்.அவிநாசி பேரூராட்சியில், நிரந்தர பணியாளர் பணியிடம் காலியாகும் போது, மூப்பு அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள், பணி நிரந்தரமாக்கப்படுவர். ஆனால், இந்த விதிமுறை மீறப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது.அவிநாசி பேரூராட்சியில், காலியாகும் துப்புரவு பணியாளர் பணியிடத்துக்கு, அரசியல் சிபாரிசு அடிப்படையில் அன்னுார் உட்பட அருகேயுள்ள பேரூராட்சிகளில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தர வாய்ப்பு பெறுகின்றனர். இதுகுறித்து, பேரூராட்சியில் பணிபுரியும், 130 தற்காலிக துப்புரவு பணியாளர்கள், கலெக்டருக்கு மனு வழங்கியுள்ளனர்.அதில், 'அவிநாசி பேரூராட்சியில் காலியாகும் துப்புரவு ஊழியர் பணியிடத்துக்கு, மாற்று பேரூராட்சியில் இருந்து, துப்புரவு பணியாளர்களுக்கு பணி நிரந்தர வாய்ப்பு வழங்கப்படுவதால், ஏற்கனவே, இப்பேரூராட்சியில், பல ஆண்டாக, தற்காலிகமாக பணிபுரிவோர் ஏமாற்றப்படுகின்றனர். இத்தகைய விதிமீறலுக்கு இடம் தரக்கூடாது. பணி நியமன விவகாரத்தை, கலெக்டர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X