சென்னை:ஹிந்து தெய்வங்களை இழிவாக பேசிய, திருமாவளவன் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.புதுச்சேரியில், 9ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன், ஹிந்து தெய்வங்களை இழிவாக பேசி உள்ளார். திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஹிந்து முன்னணியின் தென்சென்னை மாவட்ட செயலர் நித்யானந்தன், நேற்று இரவு, கிண்டி போலீசில் புகார் அளித்தார்.