போலீஸ் டைரி: திருவள்ளூர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
02:42

போதை பாக்கு விற்றவர் கைது


மேல்நல்லாத்துார் : மேல்நல்லாத்துார் ஊராட்சி பகுதியில், தடை செய்யப்பட்ட பாக்குகள் விற்பனை செய்வதாக மணவாள நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்படி, மணவாள நகர் போலீசார், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கிருஷ்ணமூர்த்தி, 67, என்பவரது கடைகளில் சோதனை மேற்கொண்ட போது, 13, எம்.டி.எம்., 5 கூல் லிப்ஸ், 11 ஸ்வாகர் என, மொத்தம், 29 போதை பாக்குகள் பறிமுதல்

செய்யப்பட்டன. கிருஷ்ணமூர்த்தியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.



டூ - வீலர்கள் பறிமுதல்



கடம்பத்துார்: அதிகத்துார் பகுதியில், கூவம் ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக

போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.அதன்படி, கடம்பத்துார் போலீசார் நேற்று முன்தினம்

அப்பகுதியில் ஆய்வுமேற்கொண்டனர்.அப்போது, போலீசாரைக் கண்டதும், கூவம் ஆற்றுப்

படுகையில் மணல் மூட்டைகள் கட்டி கொண்டிருந்தவர்கள், இருசக்கர வாகனங்களை விட்டு விட்டு தப்பியோடினர்.இதையடுத்து, கடம்பத்துார் போலீசார், இரண்டு டி.வி.எஸ்.எக்ஸ்எல் மற்றும் ஒரு ஸ்பிளன்டர் என, மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல்செய்தனர்.



இது குறித்து, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து, மணவாள நகர் சிவா, 20 என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிவர்களைத் தேடி வருகின்றனர்.



ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்



நகரி:வாலாஜா அடுத்த, மாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் குடும்பத்தினர், 'குவாலிஸ்' காரில், திருப்பதியில் இருந்து வந்தனர்.திருப்பதி- - சித்துார் சாலையில்,

பந்தார்பள்ளி அருகே, தமிழகத்தில் இருந்து, திருப்பதி நோக்கி சென்ற தனியார் பஸ், வள்ளியம்மாள் சென்ற கார் மீது மோதியது.இதில், காரில் பயணம் செய்த அரிகிருஷ்ணா, 31, ராதா, 36, அபிநயா, 17, ரேணுகா, 18, தினப்ரியா, 20, ஏழு மாத குழந்தை தனுஷ் மற்றும் வள்ளியம்மாள், 61, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இவர்களை, சித்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், அரிகிருஷ்ணா இறந்தார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X