| வருவாய்த்துறை இணையதளத்தில் வரைபடம்: பதிவிறக்கத்தில் சிக்கல் Dinamalar
வருவாய்த்துறை இணையதளத்தில் வரைபடம்: பதிவிறக்கத்தில் சிக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
02:46

கிணத்துக்கடவு:வருவாய்த்துறை இணையதளத்தில், நிலத்தின் புலப்படம் பதிவிறக்கம் செய்வதில் அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது.வருவாய்த்துறை இணையதளத்தில், நிலம் தொடர்பான சிட்டா, 'அ' பதிவேடு மற்றும் புலப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி, விவசாயிகள் வருவாய்துறை இணையதளத்திற்குள் சென்று, சிட்டா மற்றும் புலப்படங்களை எடுத்துச் சென்று, பத்திரப்பதிவுக்கும், வங்கிகளில் கடன் பெறவும் பயன்படுத்தி வருகின்றனர்.வருவாய்த்துறை இணையதளத்தில் இருந்து புலப்படம் பதிவிறக்கம் செய்வதில் அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது. புலப்படம், சிட்டா, 'அ' பதிவேடுகளின் அடிப்படையில்தான் சொத்தின் உரிமையாளர், விஸ்தீரணங்களை அறிந்து கொள்ள முடியும். இதற்காக, கிராம நிர்வாக அலுவலர் அல்லது தாலுகா அலுவலகம் சென்று கிராம பதிவேடுகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.இணையதளம் இருந்தும், புலப்படம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளும், பொதுமக்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.புலப்படம் பதிவிறக்கம் செய்வதில் உள்ள இடர்பாடுகளை நீக்க, வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X