| குண்டர் தடுப்பு சட்டம்: மாவட்ட போலீஸ் சதம் Dinamalar
குண்டர் தடுப்பு சட்டம்: மாவட்ட போலீஸ் சதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
02:49

கடலுார்:வழிப்பறி வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். இதுவரை 100 பேர் இந்த ஆண்டில் கடலுார் மாவட்டத்தில், குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்யப்பட்டுள்ளனர்.


நெய்வேலி அடுத்த கைகாளர்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துருமயில் மகன் செல்வம்,35. இவர் கடந்த மாதம் 14ம் தேதி அதே பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, நெய்வேலி , 21 வட்டம், இஸ்மாயில் தெருவை சேர்ந்த கமால்பாஷா மகன் பாருக்பாஷா,23: முருகன் கோவில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சத்தியசீலன், 24: ஆகியோர், செல்வத்தை வழிமறித்து மிரட்டி, மொபைல்போன், பணம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.நெய்வேலி இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இருவரின் குற்றச்செயலை தடுத்து நிறுத்தும் பொருட்டு எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் அன்புச்செல்வன், இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.சட்டம், ஒழுங்கு வழக்குகள் அதிகம்கடலுார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை, பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்ட வந்த 100 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருட்டு குற்ற வழக்கில் 26 பேர், சட்டம் ஒழங்கு தொடர்பான வழங்குகளில் 44; மணல் கடத்தல் வழக்கில் 4; போக்சோ வழக்கில் 2; கள்ளச்சாராய வழக்கில் 21; போதை பொருட்கள் வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X