வாலிபரை தாக்கியவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
02:49

மப்பேடு:மப்பேடு அருகே, போலீசுக்கு தகவல் கொடுத்த வாலிபரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.



மப்பேடு அடுத்த, குப்பம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் அரவிந்தன், 26.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், தன் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடப்பதாக காவல் துறை தொலைபேசி எண் 100க்கு தகவல் தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், நண்பர்களுடன் சேர்ந்து, அரவிந்தனுக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த, 11ம் தேதி மாலை, அரவிந்தன், வீட்டிலிருந்து தனியார் தொழிற்சாலைக்கு, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.



அப்போது, கொண்டஞ்சேரி மேடு அருகே வந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து, சுரேஷ் அவரது நண்பர்களான நரேஷ் மற்றும் திருப்பாச்சூரைச் சேர்ந்த அருண் ஆகியோருடன் சேர்ந்து, அரவிந்தனை மறித்து, பிளேடால் கை மற்றும் உடலில் கிழித்து, ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.



இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின், அரவிந்தன், நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில், மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து, தாஸ் மகன் நரேஷ், 28 என்பவரை கைது செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X