புவனகிரி:புவனகிரி சென்ற அ.தி.மு.க., செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., விற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலராக சிதம்பரம் எம்.எல். ஏ., பாண்டியன் நியமிக்கப்பட்டார். புவனகிரிக்கு நேற்று வந்த அவருக்கு, கீரப்பாளையம் எல்லையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.புவனகிரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், ஒன்றிய கழக செயலர்கள் ஜெயபாலன், சிவப்பிரகாசம் தலைமை தாங்கினர். நகர கழக செயலர் செல்வக்குமார் வரவேற்றார். அவைத் தலைவர் குமார், முன்னாள் எம்.பி., இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், சர்க்கரை ஆலை துணை தலைவர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன், எம்.ஜி.ஆர்., மற்றும் அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார்.முன்னாள் நகர கழக செயலர் தோப்புசுந்தர், மாவட்ட துணை செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, இணை செயலர் செஞ்சி லட்சுமி, ஊராட்சி கழக செயலர் ஜெயசீலன், முன்னாள் கதர்வாரிய உறுப்பினர் தனஜெயராமன், மாவட்ட அம்மா பேரவை செயலர் உமா மகேஸ்வரன், பாசறை தலைவர் ஜெயராஜ், நிர்வாகிகள் சிவஞானம், நாகராஜ், ஜெயபால், இளங்கோ, தங்க மகாலிங்கம், கிருஷ்ணசாமி, சித்ரா பழனியப்பன், ஜெயப்பிரியா ரகுராமன், சிவக்குமார், தண்டபாணி, குமார், தில்லைநாயகி, இளங்கோவன் பங்கேற்றனர்.