செங்கல்பட்டு:செங்கல்பட்டு
அடுத்த, நென்மேலி கோகுலம் பொது பள்ளியில்,
நேற்று முன்தினம், அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி முதல்வர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார்.
கண்காட்சியில், சூரிய சக்தி, குடிநீர் சிக்கனம், சுகாதாரம் உட்பட, பல்வேறு தலைப்புகளின் கீழ், மாணவர்களின் மாதிரி படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
செங்கல்பட்டு
கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச்
சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில்,
முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு, பரிசு மற்றும்
சான்றிதழ்களை, பள்ளியின் தலைவர் கோகுலம்
கோபாலன், துணைத்தலைவர் பிரவின், தாளாளர் லிஜிஷா பிரவின் ஆகியோர் வழங்கினர்.