எகிறும் நாற்று வெங்காயம் விற்பனை விலையால் கிராக்கி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
03:04

உடுமலை:நடவு சீசனில், நாற்று வெங்காயத்தின் விலை எகிறுவதால், பாதிப்பை தவிர்க்க, தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, சின்னவெங்காயம் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. நடவுக்கு, விதை வெங்காயம் மற்றும் நாற்றுகளும் பயன்படுத்தப்படுகிறது. இதில், நடவு சீசனில், பாத்தி அமைத்து, நாற்றுகளை உற்பத்தி செய்பவர்களிடம், விவசாயிகள், விளைநிலத்தின் பரப்புக்கு ஏற்ப, விலைக்கு வாங்கி செல்கின்றனர். சந்தைக்கு வரத்து குறைவு, சாகுபடி பரப்பு சரிவு உட்பட காரணங்களால், சின்னவெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது, கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை, விலை நிலவரம் உள்ளது.எனவே, வடகிழக்கு பருவமழை மற்றும் பி.ஏ.பி., பாசனத்துக்கு சின்னவெங்காயம் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், விதை வெங்காயம் மற்றும் தேவையான நாற்று கிடைக்காமல், தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. விவசாயிகள் கூறியதாவது: கிணற்றுப்பாசனத்துக்கான சாகுபடிகளில், சின்னவெங்காயத்துக்கு மட்டுமே அதிக செலவாகிறது. தற்போது, ஒரு பாத்தி அளவிலான சின்னவெங்காய நாற்றுகள், 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் என்றளவில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கிறது.ஆனால், அறுவடையின் போது விலை கிடைப்பதில்லை. எனவே, தோட்டக்கலைத்துறை சார்பில், சீசன் சமயங்களில், தோட்டக்கலை பண்ணைகள் மூலம் சின்னவெங்காய நாற்றுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X