சுங்குவார்சத்திரம்:சுங்குவார்சத்திரத்தில், கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும் என,
பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, திருமங்கலம், சந்தவேலுார், மொளச்சூர் என, மூன்று ஊராட்சிகளின் எல்லையில், சுங்குவார்சத்திரம் உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட வணிக கடைகள், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இந்நிலையில், சுங்குவார்சத்திரத்தில் அடிப்படை
வசதிகள் இல்லாமல், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:சுங்குவார்சத்திரத்தில், மழைக்காலத்தில் மழை
நீருடன் கழிவு நீர் கலந்து, சாலையில் ஆறாய் ஒடுகிறது. குப்பை கழிவுகள், பல நாட்களாக
அகற்றப்படாமல் உள்ளன. இதனால், சுகாதார சீரகேடு ஏற்பட்டுள்ளது. சுங்குவார்சத்திரத்தில்,
கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டும்இவ்வாறு, அவர்கள் கூறினர்.