தரமான விதை: அதிக மகசூலுக்கு உத்தரவாதம் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
தரமான விதை: அதிக மகசூலுக்கு உத்தரவாதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
03:14

திருவள்ளூர்:அதிக மகசூல் பெற, விதையின் முளைப்புத் திறனை அறிந்து பயிரிட வேண்டும் என, வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.



திருவள்ளூர் மாவட்ட விதை பரிசோதனை, மூத்த வேளாண் அலுவலர் அ.ரூபா விடுத்துள்ள

செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள், தரமான விதையை பயிரிட்டால் மட்டுமே, அதிக லாபம் பெற முடியும். தரமான விதை என்பது, நல்ல முளைப்புத் திறன், சரியான ஈரப்பதம், சுத்தம், கலப்பு ரக விதை இல்லாமல் இருத்தல் ஆகும்.



விதையின் முளைப்புத் திறன் அறிந்து விதைத்தால், குறைவான விதையில் அதிக மகசூல் பெற முடியும்.எனவே, விவசாயிகள், விதை விற்பனையாளர்கள், விதை உற்பத்தியாளர்கள்

தங்களிடம்உள்ள விதைகளின் முளைப்புத் திறனை அறிந்து கொள்ளவும்.அதற்கு, விதை மாதிரி எடுத்து, 48, ஜே.என்.சாலை, பெரிய குப்பம், திருவள்ளூர் என்ற முகவரியில் இயங்கும் விதை

பரிசோதனை மையத்திற்கு, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். ஒரு விதை மாதிரி பரிசோதனை கட்டணம், 30 ரூபாய்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X