திருவள்ளூர்:அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், காலியாக உள்ள தற்காலிக ஒப்பந்த உதவியாளர் பதவிக்கு, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
அவர்கள், தங்களது பெயர், கல்வித் தகுதி, வீட்டு முகவரி, தொலைபேசி எண் ஆகிய
விபரங்களை உரிய சான்றுகளுடன், வரும், 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.விண்ணப்பத்தை, துணை இயக்குனர் / முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அம்பத்துார்,
சென்னை - 600 098 என்றமுகவரிக்கு அனுப்பவும்.விபரங்களுக்கு, 044 - 2625 2453 என்ற
தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு, கலெக்டர் மகேஸ்வரி கேட்டுக் கொண்டு
உள்ளார்.