தொடர் வழிப்பறி: 4 பேர் கைது | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
தொடர் வழிப்பறி: 4 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
03:23

ஊத்துக்கோட்டை:தனியாக செல்பவர்களை மடக்கி பணம், மொபைல்போன் ஆகியவற்றை திருடிய, நான்கு பேர் கொண்ட கும்பலை, போலீசார் கைது செய்தனர்.



திருவள்ளூர் நகர், செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், வெங்கல், பென்னலுார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தனியாக நடந்து வருபவர்கள், டூ - வீலர்களில் வருபவர்களை, கத்தியை காட்டி மிரட்டி, பணம், மொபைல்போன் ஆகியவை கொள்ளை போகும் சம்பவங்கள் சமீபத்தில் நடந்து வந்தன.ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., தலைமையில், தனிப்படை போலீசார் தீவிர

தேடுதல்பணியில் ஈடுபட்டு வந்தனர்.



நேற்று முன்தினம் இரவு, திருவள்ளூர்- - செங்குன்றம் சாலையில், விஷ்ணுவாக்கம் பகுதியில் தனிப்படை போலீசார், வாகன சோதனை மேற்கொண்ட போது, சந்தேகப்படும்படி, நான்கு பேர்,

டூ - வீலர்களில் வந்தனர்.அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவர்கள், தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட திருவள்ளூர்,தண்ணீர்குளம் ஆதித்யன், 21, சுதாகர், 19, செல்வா, 23,மற்றும் 18 வயது சிறுவன் ஒருவன் என்பது தெரியவந்தது.இவர்கள் மீது,வழக்குப் பதிந்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல்சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X