| தங்க பதக்கம் பெற்ற அரசு சித்த மருத்துவர் Dinamalar
தங்க பதக்கம் பெற்ற அரசு சித்த மருத்துவர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
03:47

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதுார் சித்த மருத்துவர் பட்ட மேற்படிப்பு முடித்து தங்க பதக்கம் பெற்றார்.பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில், சித்த மருத்துவராக நல்லதம்பி பணியாற்றுகிறார்.இவர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூன்றாண்டு பட்ட மேற்படிப்புக்கு (எம்.எஸ்சி., மெடிக்கல் பார்மலோஜி) கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ஜே.எஸ்.எஸ்., மருத்துவ கல்லுாரிக்கு கடந்த, 2016ம் ஆண்டு அனுப்பப்பட்டார்.மூன்றாண்டு மருத்துவ மருந்தியல் பட்ட மேற்படிப்பினை முடித்து, கல்லுாரியில் அதிக மதிப்பெண் பெற்று முதலாம் இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஜே.எஸ்.எஸ்., உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலை கழகத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தங்க பதக்கமும், பட்ட மேற்படிப்பு சான்றிதழும் இவருக்கு வழங்கினார்.இவர், வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில், அகத்தியர் சிலை அமைத்ததற்கு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஆகியோரால் பாராட்டு சான்று பெற்றுள்ளார்.இவரது சேவையை பாராட்டி கடந்த, 2015ம் ஆண்டு சிறந்த மருத்துவர் விருது தமிழக அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X