| யானை கண்டு ஓட்டம் :உயிர் தப்பினார் பெண் Dinamalar
யானை கண்டு ஓட்டம் :உயிர் தப்பினார் பெண்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
03:47

வால்பாறை:வால்பாறை அருகே வீட்டிற்கு வெளியே வந்த பெண்ணை ஒற்றை யானை விரட்டியதில், அதிர்ஷ்டவசமாக தப்பினார்.வால்பாறை அடுத்துள்ள மாணிக்கா ஒ.சி., குறிஞ்சாம்பாடி பகுதியில் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் உள்ளன. இங்கு நேற்று மதியம் வந்த ஒற்றை யானை குடியிருப்பு பகுதி அருகில் முகாமிட்டது. இந்நிலையில், ஜெசீனா,22, என்பவர், வீட்டின் அருகே யானை நிற்பது தெரியாமல் வெளியே வந்துள்ளார். யானையை பார்த்த பயத்தில் கூச்சலிட்டவாறு, பின் பக்க வழியாக ஒடினார். யானை அவரை விரட்டியது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் அதிக சப்தம் எழுப்பியதால் யானை அவரை விட்டு சென்றது. யானையிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய அவருக்கு, தலையில் லோசான காயம் ஏற்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் யானையிடம் இருந்து தப்பிய அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானையை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X