பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் அரசுக்கு எதிராக, போஸ்டர் ஒட்டிய மூன்று பேர் மீது கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி தாலுகா அலுவலக சுவற்றில் அனுமதி பெறாமல் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த போஸ்டரை நேற்று முன்தினம் இரவு ஒட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கிழக்கு போலீசார், போஸ்டர் ஒட்டிய பொள்ளாச்சியை சேர்ந்த மகாலிங்கம், பிரகாஷ், கண்ணுசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.