| இ - சேவை மையம் தீ விபத்தால் இடமாற்றம் Dinamalar
இ - சேவை மையம் தீ விபத்தால் இடமாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
03:49

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில், இ - சேவை மையம், தகவல் மையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்படும் இ - சேவை மையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர்.இந்த விபத்தில், இ - சேவை மையத்தில் இருந்து இரண்டு கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட அலுவலக பொருட்கள் சேதமடைந்தன. பொதுமக்கள் வசதிக்காக, இ - சேவை மையம் மாற்று இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தாசில்தார் தணிகைவேல் கூறுகையில், ''இ - சேவை மையம் தீ விபத்து ஏற்பட்டதால், உடனடியாக மாற்று கட்டடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, தகவல் மையத்தில் இ - சேவை மையம் செயல்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X