பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே மினி பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி அருகே கள்ளிபாளையத்துக்கு இயக்கப்படும் மினி பஸ் சில நேரத்தில், கிராமத்துக்குள் செல்லாமல், குறிச்சி விநாயகர் கோவில் அருகே நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை கள்ளிப்பாளையம் வந்த பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். அப்போது பொதுமக்கள், 'கள்ளிப்பாளையத்துக்கு பஸ் இயக்காததால், பள்ளி மாணவர்கள் என அனைவரும் ஒரு கி.மீ., துாரத்துக்கு நடந்து வர வேண்டிய துள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை பஸ்சை விட மாட்டோம்,' என்றனர்.அதிகாரிகள், பஸ் உரிமையாளர்கள் வந்த பின்னர் பஸ் விடுவோம் என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டது.பஸ் உரிமையாளர், ஆர்.டி.ஓ., அதிகாரிகளிடம் பேசி, முறையான வழித்தடத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்ததால், பஸ்சை விடுவித்து கலைந்து சென்றனர்.