மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான குழப்பம் தீர்ந்தது!  செங்கல்பட்டு பிரிந்தாலும் பழையபடியே தேர்தல்  மீண்டும் போட்டியிடுவோமா என பலரும் ஆவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
03:53

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அரசாணைவெளியிட்டாலும், கடந்த உள்ளாட்சி தேர்தல் நடைமுறைபடி, இரண்டிற்கும் ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி மட்டுமே ஏற்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அதேசமயம், 2016ல் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், தங்கள் பெயர் மீண்டும் அறிவிக்கப்படுமா என, ஆவலுடன் உள்ளனர்.தமிழகத்தில், 2016ல் உள்ளாட்சி தேர்தல் நடத்த, அனைத்து

ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், உள்ளாட்சி பதவிக்கான இட ஒதுக்கீடு பிரச்னையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.



இழுபறி





தொடர்ந்து, இரு ஆண்டுகளாக இழுபறியில் இருந்த உள்ளாட்சி தேர்தலை, இந்தாண்டு

இறுதியில் நடத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், மாநில தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகங்களும் செய்து வருகிறது.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டு என்ற புதிய மாவட்டத்தை, ஜூலை மாதம், முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில்அறிவித்தார்.



தொடர்ந்து, மாவட்டத்தை பிரிப்பதற்கு சிறப்பு அதிகாரியாக, ஜான் லுாயிஸ் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, தமிழக அரசு அறிவித்தது.இவர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களை பிரிப்பதற்கான அனைத்து பணிகளையும், கலெக்டர் பொன்னையாவுடன் சேர்ந்து மேற்கொண்டார்.



இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டு

உள்ளது.இதில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு எட்டு தாலுகாக்களும், காஞ்சிபுரம்

மாவட்டத்திற்கு ஐந்து தாலுகாக்களும் என,பிரிக்கப்பட்டு உள்ளது.



கேள்வி எழுந்தது





மாவட்டம் பிரிவது தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே, உள்ளாட்சி தேர்தலில், ஒரு மாவட்ட ஊராட்சி தலைவருக்கான பதவி வருமா அல்லது இரண்டு மாவட்டங்களுக்கான, இரண்டு மாவட்ட ஊராட்சி தலைவருக்கு போட்டி வருமா என, கேள்வி எழுந்தது. அரசியல்

கட்சியினருக்கும் இந்த குழப்பம் நீடித்து வந்தது.இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட

அரசாணையில், செங்கல்பட்டு என்ற புதிய மாவட்டம் உருவானாலும், பழையபடியே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.



அரசாணை





உள்ளாட்சி துறை சட்டப்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும் எனவும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு என, மாவட்ட ஊராட்சி தலைவர்

பதவி ஏற்படுத்தப்படாது எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.இது ஒரு புறம் இருக்க,

உள்ளாட்சி தேர்தலில், தங்கள் பெயரே வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்படுமா என,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான வேட்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.



மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வின் மேலிடம் வேட்பாளர்களை அறிவித்தது.முந்தைய தேர்தலின்போது, முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் உயிருடன் இருந்தனர். அவர்களின் பார்வையின் கீழ், வேட்பாளர்கள் அறிவிக்கப்

பட்டனர்.தற்போது, இருவரும் இல்லாததால், தற்போதைய தலைமை, தங்களை மீண்டும்

அறிவிக்குமா என, பழைய வேட்பாளர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.



அரசியல் மாற்றங்கள்





கடந்த, 2016க்கு பின், அரசியல் மாற்றங்கள் பல நடைபெற்றன. கடந்த முறை வேட்பாளராக நிறுத்தப்பட்டவர், தற்போது எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்தே, கட்சி தலைமை

அறிவிக்கும் என, கட்சியினர் கூறுகின்றனர்.மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கான இட

ஒதுக்கீட்டு விபரம், பல அரசியல் கட்சியினருக்கு தெரியவில்லை என, கூறப்படுகிறது.


29ல் உதயமாகிறது





செங்கல்பட்டு புதிய மாவட்ட அரசாணை, 12ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து,

செங்கல்பட்டு புதிய மாவட்ட துவக்க விழா, வரும், 29ம் தேதி, செங்கல்பட்டில் நடக்கிறது.

முதல்வர் இ.பி.எஸ்., காணொலி காட்சி மூலம், திறந்து வைப்பதாக தெரிகிறது. அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X