காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் பகுதியில், குடிநீரில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து, பொதுமக்கள் நேற்று, சாலை மறியல் செய்தனர்.சின்ன
காஞ்சிபுரம் வடக்கு மாட வீதி, திருவீதி பள்ளம்,
சேதுராயர் தெரு,
கிருஷ்ணசாமி நகர் ஆகிய பகுதிகளில், நகராட்சி வினியோகிக்கும்
குடிநீரில், கழிவு நீர் கலந்து வருகிறது. இதுகுறித்து புகார் அளித்தும், நகராட்சி அதிகாரிகள்
கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், நேற்று காலை, சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதி குடிநீர் குழாயில், கழிவு நீர் கலந்த குடிநீர் வந்துள்ளது.இதை பிடித்த மக்கள், சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி,
செங்கல்பட்டு சாலையில் மறியல் செய்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த விஷ்ணு காஞ்சி
போலீசார், பொதுமக்களை சமரசப்படுத்தினர். நகராட்சி பொறியாளர் வந்து, ஆய்வு செய்தார்.
பின்,
'குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க, விரைவில் நடவடிக்கை
எடுக்கப்படும்.
தற்காலிகமாக, நகராட்சி லாரிகளில் குடிநீர் வழங்கப்படும்' என, அதிகாரி கூறியதை அடுத்து, பொதுமக்கள் கலைந்தனர்.