பொன்னேரி:ரயில்
நிலைய நுழைவு வாயில் பகுதியில், 'நோ பார்க்கிங்' ஏரியாவில்
நிறுத்தப்படும் வாகனங்களால், பயணியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பொன்னேரி ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதி வழியாக, ஆயிரக்கணக்கான பயணியர் சென்று வருகின்றனர்.பயணியர்
சென்று வரும் பாதையிலும், டிக்கெட் கவுன்டர்கள் அருகிலும்,
இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், இரும்பு தடுப்புகள்
அமைக்கப்பட்டு,
வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டது.
'நோ
பார்க்கிங்' அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்ட நிலையிலும், ரயில்
நிலையத்திற்கு வரும் ஒரு சில பயணியர், தங்கள் இருசக்கர வாகனங்களை
வரிசையாக நிறுத்திவிட்டு
செல்கின்றனர். இந்த வாகனங்களால்,
பயணியர் பெரும் சிரமத்திற்குஆளாகின்றனர்.
ஒரே நேரத்தில், ரயில் நிலையத்தில் இருந்து கூட்டமாக வெளியேறும் பயணியர், இந்த
வாகனங்களுக்கு இடையேசெல்ல முடியாமல்தவிக்கின்றனர்.