மீண்டும் தலை தூக்கும் ஆக்கிரமிப்பு | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
மீண்டும் தலை தூக்கும் ஆக்கிரமிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
03:58

பொதட்டூர்பேட்டை:பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், கடந்த மாதம் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன. அந்த பகுதியில், மீண்டும் தார்பாய்களை விரித்து

ஆக்கிரமிக்கப்பட்டு வருவது, பயணியர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.



பொதட்டூர்பேட்டை நிலையத்தில், 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு தொடர்ந்து வந்தது.

நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட இடத்தில், கான்கிரீட் கட்டடங்கள் பலமான

அஸ்திவாரத்துடன்கட்டப்பட்டன.இதனால், வாகனங்கள் வந்து செல்லவும், பயணியர் நிற்கவும் போதிய இடவசதி இன்றி அவதிப்பட்டனர்.



இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன. இதனால், பயணியருக்கும், பஸ்கள் நிறுத்தவும் போதுமான இடம் கிடைத்தது. நெடுஞ்சாலை துறையின் இந்த நடவடிக்கை, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.ஆனால், தற்போது இந்த பகுதியில், தார்பாய்களை விரித்து, ஆக்கிரமிப்பு மெல்ல மெல்ல தலைதுாக்க துவங்கியுள்ளது.
இதை, முளையிலேயே கிள்ளாமல் விட்டால், மீண்டும் கான்கிரீட் கட்டடங்கள் முளைக்கும் நிலை ஏற்படலாம் என்பதால், பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X