ஊத்துக்கோட்டை:வங்கியில், 1 லட்சம் ரூபாய் எடுத்து தருவதாக கூறி, நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
எல்லாபுரம்
ஒன்றியம், வடமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஸ், 65. நேற்று
முன்தினம் மாலை, அடையாளம் தெரியாத ஒருவர், வீட்டிற்கு வந்து,
உங்கள் பெயர் உடையாரா என,
கேட்டுள்ளார்.'ஆம்' என, ரோஸ்கூறியுள்ளார். உங்களது வங்கி கணக்கில், 1லட்சம் ரூபாய் விழுந்துஉள்ளது.ரூ.4,750 பணம் போட்டால், 1 லட்சம் எடுத்து தருவதாக கூறியுள்ளார். அதற்கு, ரோஸ், 1,000 ரூபாய்,முக்கால் சவரன் நகைஉள்ளது என்றார்.
பணம், நகையை பெற்றுக் கொண்ட நபர், திரும்பி வரவில்லை. இது குறித்து, பெரியபாளையம் போலீசில், ரோஸ் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி
வருகின்றனர்.