| இருளில் பூங்கா Dinamalar
இருளில் பூங்கா
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
04:19

தேவகோட்டை:தேவகோட்டை ராம்நகரில் 15 ஏக்கரில் அழகப்பா பூங்கா உள்ளது. பூங்கா பராமரிப்பின்றி புதராக காணப்பட்டதையடுத்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து புதர் அகற்றப்பட்டது.



தற்போது பொழுது போக்க வருவோர் மட்டுமின்றி நடைபயிற்சியாளர்கள் தினமும் வருகின்றனர். கடந்த 15 தினங்களாக உயர் கோபுர விளக்குகள், பூங்காவை சுற்றியுள்ள அனைத்து விளக்குகளும் எரியவில்லை. ஆறு மணிக்கு மேல் இருள் சூழ்ந்து விடுவதால் மக்கள் மாலையில் பூங்காவிற்குள் வருவதில்லை.பூங்கா பராமரிப்பும், விளக்கு பராமரிப்பும் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ளது.கமிஷனர் பார்வையிட்டு விளக்குகள் எரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X