| சிவகங்கை பள்ளிகளில் குழந்தைகள் தின விழா Dinamalar
சிவகங்கை பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

15 நவ
2019
04:46
பதிவு செய்த நாள்
நவ 15,2019 04:25

சிவகங்கை:சிவகங்கை பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.



சிவகங்கை சாம்பவிகா பள்ளி செயலர் சேகர் போட்டிகளை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் முத்துக்குமார், உதவி தலைமை ஆசிரியர் தியாகராஜன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்.ஸ்ரீராமகிருஷ்ணா துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயாள் வரவேற்றார். பெற்றோர் ரூபிணி தலைமை வகித்தார். ஆசிரியர் சொர்ணவள்ளி நன்றி கூறினார்.



சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். மாணவர் தினேஷ் நன்றி கூறினார்.



சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதல்வர் முத்தையா தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாறுவேட போட்டி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் சந்திரசேகரன் உட்பட ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள் பங்கேற்றனர்.



நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளியில் மாணவிகளின் தலைவர் ரசிகா தலைமையில் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர்.



காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் உதயக்குமார் தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் மூலிகை மரக்கன்றுகளை நடவு செய்தனர். ஆசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.



தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மாணவர் அஜய் வரவேற்றார். நுாலகர் செந்தில்ராஜா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.



மானாமதுரை: மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ் தலைமை வகித்தார். முதல்வர் ஜெஸிகிறிஸ்டி வரவேற்றார். மாணவர்களின் கலைநிகழ்ச்சி, மாறுவேட போட்டி நடந்தது.



சிவகங்கை:சிவகங்கை ஸ்ரீபாலமுருகன் நர்சரி பள்ளியில் நிறுவனர் பார்வதி கல்யாணராமன் சிறப்புரை ஆற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாண்டிரங்கசாமி தலைமை

வகித்தார். தலைமை ஆசிரியை ஆர்த்திகுமார் நன்றி கூறினார்.



மேலப்பசலை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி, எஸ்.,புதுார் பள்ளி ஆசிரியை ஆனந்தி பரிசுகளை வழங்கினர். பள்ளி நிர்வாகி அருள் ஜோசப்பின் பெட்சி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X