சிங்கம்புணரி:சிங்கம்புணரி
பேரூராட்சியில் கடந்த 2 ஆண்டாக செயல் அலுவலர் இன்றி,
மக்களுக்கான அன்றாட பணிகள் பாதித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இங்கு, 18
வார்டுகளில் 20 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இம்மக்களின்
குடிநீர், சுகாதாரம்
உள்ளிட்ட அடிப்படை பணிகளை பூர்த்தி செய்து தரும்
முக்கிய இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் உள்ளது. ஆனால்,
இப்பேரூராட்சி நிர்வாகத்தை நடத்தி செல்ல வேண்டிய செயல் அலுவலர்
பணியிடம் 2 ஆண்டாக காலியாக இருப்பதால், மக்களின் அடிப்படை
தேவைகள் முழுமை அடையாத நிலையில் உள்ளது.
கடைசியாக இங்கு செயல் அலுவலராக இருந்த முனியாண்டிக்கு பின், நிரந்தர அலுவலர்
போடவில்லை.தொடர்ந்து
திருப்புத்துார், நெற்குப்பை, கோட்டையூர் பேரூராட்சி செயல்
அலுவலர்களே, சிங்கம்புணரியில் கூடுதலாக கவனித்து வருகின்றனர். செயல் அலுவலர்கள் இன்றி தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வினியோகம், பிளான் அப்ரூவல் வழங்கல், பிறப்பு, இறப்பு சான்று வழங்கல் உள்ளிட்ட மக்களின் அன்றாட பணிகள் கடுமையாக பாதித்துள்ளன.