| நிறைவு * குந்துகால் மீன் இறக்கு தளம் பணிகள் 75 சதவீதம் :மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு வருகிறது Dinamalar
நிறைவு * குந்துகால் மீன் இறக்கு தளம் பணிகள் 75 சதவீதம் :மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு வருகிறது
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
04:49

ராமநாதபுரம்:ராமேஸ்வரம் அருகே குந்துகால் பகுதியில் 70 கோடி ரூபாயில் கட்டப்படும் மீன் இறக்குதளம் பணிகள் 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதால் மூன்று மாதங்களில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.



ராமேஸ்வரம், மண்படம், பாம்பன் பகுதிகளில் அதிகளவு விசைப்படகுகள் உள்ளதால்,

படகுகளை நிறுத்துவதிலும், மீன் பிடி தொழிலிலும் பல நெருக்கடிகள் உள்ளது.இதனை தவிர்க்க, ராமேஸ்வரம் அருகேகுந்துகால் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் இறக்குதளம் அமைக்கும் பணிகள் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.இதில் மீன் இறக்கு தளம், படகுகள் பராமரிப்பு பகுதி, படகுகள் நிறுத்தும் இடம், மீன்களை பதப்படுத்தும் மையம்போன்ற நவீன வசதிகள் உள்ளது.


கடலுக்குள் 500 மீ.,க்கு அலை தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. படகு பராமரிப்பு, பழுது

பார்க்கும் மையம், படகு நிறுத்தும் இடம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீன்கள் பதப்படுத்தும் மையம், கழிப்பறை, பாதுகாப்பு மையம், ரோடு அமைக்கும் பணிகள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இதுவரை 75 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 3 மாதங்களில் இந்த பணிகள் நிறைவு பெற்று குந்துகால் மீன் இறக்கு தளம் மீனவர்களின்

பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X