| உலக தர தின விழா கொண்டாடினால் போதுமா அரசு மருத்துவமனையில் சுகாதாரம் வேண்டாமா Dinamalar
உலக தர தின விழா கொண்டாடினால் போதுமா அரசு மருத்துவமனையில் சுகாதாரம் வேண்டாமா
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
04:54

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் தலைமையில் உலக தர விழா கொண்டாடினால் மட்டும் போதுமா. சுகாதாரத்தில் தரத்தை மேம்படுத்த வேண்டாமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.



ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று உலக தர தின விழா கொண்டாடப்

பட்டது. கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஆனால் இந்த அரசு மருத்துவமனையின் தரம் குறித்து யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

விழா கொண்டாடிய நேரத்தில் மருத்துவமனைக்குள் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து வெளியேறிய கழிவுநீர் துர்நாற்றத்தால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.



இந்த நிலையில் தான் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்கலெக்டர் தலைமையில் உலக தர தின விழா கொண்டாடப்பட்டது.இதில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர்

வெங்கடாச்சலம் கண்காணிப்பாளர் ஜவஹர்லால், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஞானக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். தரம் குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் பிரசவ வார்டு செல்லும் வழியில் சித்த மருத்துவப்பிரிவு பகுதியில்பாதாள

சாக்கடை மேன்ஹோலில் கழிவுநீர் நிறைந்து வெளியேறியது. இதனால் நோயாளிகள் அப்

பகுதியில் நடமாட முடியாமல் துர்நாற்றத்தில் தவித்தனர்.



இதே போல் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவு பகுதியில் செப்டிக் டேங்க் கழிவு திறந்த

வெளியில் ஆறாக ஓடுகிறது.தர தினம்கொண்டாடும் மருத்துவமனை நிர்வாகம் அதே

வளாகத்தில் நிறைந்து வழியும் கழிவு நீரை பற்றி கண்டு கொள்ளவில்லை.இப்படி ஒரு

நிலையில் கலெக்டர் வீரராகவ ராவ் இந்த விழாவில் எப்படி பங்கேற்றார், என நோயாளிகள், பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.இந்த அரசு மருத்துவமனை சமீப காலமாக நோய் தீர்க்கும் மையமாக இல்லாமல், நோய் பரப்பும் மையாக செயல்பட்டு வருகிறது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X