ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
04:59

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் தின விழா நடந்தது. கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார்.

கலெக்டர் பேசுகையில், சுற்றுப்புறத்தை துாய்மையாக பராமரித்தல், ஆரோக்கியமான உணவு பழக்கம், பிறரிடம் அன்பு பாராட்டுதல் போன்ற நற்பண்புகளை சிறுவயது முதல்

குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும், என்றார்.



சைல்டுலைன் சார்பில் பள்ளி மாணவர்கள், 'குழந்தைகளின் நண்பன்' என்ற வாசகம் அடங்கிய காகித கைவளையை கலெக்டர் வீரராகவ ராவ், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமாருக்கு

அணிவித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, குழந்தை பாதுகாப்பு அலுவலர் துரை முருகன் கலந்து கொண்டனர்.



* மண்படம் ஒன்றியம் ஆக்கிடா வலசை ஆரம்ப பள்ளியில்நடந்த விழாவிற்கு தலைமை

ஆசிரியர்கோமகன் தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர் திருமேனிநாயகம் வரவேற்றார். விழாவில் நேருவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கிராமத்தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



*ராமநாதபுரம் சபா நடேச அய்யர் துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களை ஞாபகப்படுத்தி, பள்ளி குழந்தைகளை அந்த விளையாட்டுக்களை விளையாடச் செய்தனர்.மறந்து போன பழந்தமிழர்களின்

விளையாட்டுக்களைபள்ளி குழந்தைகளுக்கு விளையாட கற்றுக்கொடுத்தனர்.இந்த விழாவிற்கு ஓய்வு ஆசிரியர் பயிற்றுனர் நாகராஜன் தலைமை வகித்தார். வட்டார வள

மைய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் வரவேற்றார். பள்ளி செயலர் பாலசுப்பிரமணி,

தலைமையாசிரியர் ராபர்ட் செல்வராஜ் விளையாட்டுக்களை துவக்கி வைத்தனர்.



ஏற்பாடுகளை பள்ளி குழு தலைவர் சொர்ண கணபதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர். தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டுக்களான

பூப்றிக்க வருகிறோம், பச்சைக்குதிரை தாண்டுதல், பம்பரம், பரம பதம், சதுரங்கம், பல்லாங்குழி உள்ளிட்ட 41 வகையான விளையாட்டுக்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து விளையாட செய்தனர்.



*ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த விழா

விற்கு தலைமை ஆசிரியர் வேல்சாமி தலைமை வகித்தார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அறிவழகி முன்னிலை வகித்தார். பலுான் உடைத்தல், சாக்கு போட்டி, தவளை

ஓட்டம், கயிறு தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அருளானந்தசாமி, வீரமணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலைச்செல்வி, குருநாதன், தங்கம்மாள் பீவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



*தொண்டி அரசு தொடக்கபள்ளி (மேற்கு, கிழக்கு) மற்றும் நம்புதாளை அரசு தொடக்கபள்ளிகளில் குழந்தைகள் தின விழா நடந்தது. மாணவர்களை ஆசிரியர்கள் மலர் துாவி வரவேற்றனர்.

நம்புதாளையில் பல்வேறு தெருக்களில் பெற்றோர் குழந்தைகளுக்கு உணவு வழங்கினர். அதனை தொடர்ந்து பள்ளிகளில் நடந்த பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. தலைமைஆசிரியர்கள் சாந்தி, லியோ ஜெரால்டு

எமர்சன்,ஜான் தாமஸ் மற்றும் பெற்றோர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X