கமுதி:கமுதி
அருகே மண்டலமாணிக்கம், புத்துருத்தி, காக்குடி, புதுக்குளம்,
எம்.பள்ளபச்சேரி, வலையபூக்குளம் உட்பட பல கிராமங்களில்
நீராதாரமாக
விளங்கும் குண்டாற்றில் காட்டுப் பாதை வழியாக
இரவில் மணல் திருட்டு நடக்கிறது. கமுதி தாசில்தார் செண்பகலதா
உத்தரவின் பேரில், காக்குடி வி.ஏ.ஓ., முருகன், மண்டலமாணிக்கம்
போலீசாருடன் இரவு ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் மணல்
ஏற்றி வந்த டிப்பர் லாரியை மடக்கினர்.
போலீசாரை கண்டதும் டிரைவர் மற்றும் உரிமையாளரான மண்டலமாணிக்கத்தை சேர்ந்த பாலு மகன் மணிகண்டன் 37, காட்டு வழியாக தப்பினார். லாரியை பறிமுதல்செய்தனர்.