மதுரை :மதுரை அரசு மருத்துவமனையில் உலக தர தினம் கொண்டாடப்பட்டது. டீன் சங்குமணி தலைமை வகித்தார். கலெக்டர் வினய் பேசினார். அவர், ''இந்திய அளவில் தமிழகத்தில் மருத்துவ தரம் உயர்ந்துள்ளது. மதுரை மருத்துவமனையிலும் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது. இதே போன்று துாய்மை, நோயாளிகளை கவனிக்கும் முறை என அனைத்திலும் தரம் உயர வேண்டும்,'' என்றார். மருத்துவமனை வளாகத்தில் இருந்த குப்பையை அகற்றி கலெக்டர் துாய்மை பணியில் ஈடுபட்டார்.