வெளிநாட்டிலும் நாமே கார் டிரைவ் பண்ணலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:20

வாகன ஓட்டுனர் உரிமம் பெற குறைந்தபட்ச தகுதிகள் என்ன... கல்வித் தகுதி தேவையா





18 வயது முடிந்திருந்தால் 50 சிசி க்கு மேற்பட்ட கியர் வாகனங்கள் (மோட்டார் சைக்கிள்,

ஸ்கூட்டர்) ஓட்ட லைசென்ஸ் பெறலாம். 20 வயது முடிந்திருந்தால் இலகு ரக வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் பெறலாம். எதற்கும் கல்வித் தகுதி தேவை இல்லை.



இலகு ரக வாகனங்கள் என்றால் என்ன





ஆட்டோ, கார் உள்ளிட்டவை இலகு ரக வாகனங்கள். அவற்றை பொதுப் போக்குவரத்து வாகனமாக (டி-போர்டு) பயன்படுத்த பேட்ச் (அடையாள அட்டை) பெற வேண்டும்.



கனரக வாகனம் ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி





இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.



ஓட்டுனர் உரிமம் பெறும் முறை என்ன





ஓட்டுனர் உரிமம் பெற ஒருவர் கொண்டு வரும் வாகனத்துக்கு ஆர்.சி. (பதிவுச் சான்று), வாகனக் காப்பீடு, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் நடப்பில் இருக்க வேண்டும். பின்பு ஆய்வாளர்

முன்னிலையில் வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டும். ஓட்டுனர் உரிமம் பெற ரூ.800 கட்டணம் செலுத்தவேண்டும். இருசக்கர வாகனம் மற்றும் கார் இரண்டிற்கும் சேர்த்து என்றால் ரூ.1,100 கட்டணம் செலுத்த வேண்டும்.



வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதால் அடையும் பலன்கள்





ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து போக்குவரத்து, சாலை விதிமுறைகளை கற்று அவர்

நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சி அது.ஓட்டுனர் வாகனம் ஓட்டும்

நேரங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுனர்

உரிமத்தில் குறிப்பிடப்படும். மது குடித்து ஓட்டியிருந்தாலோ, விபத்து ஏற்படுத்தியிருந்தாலோ 3 முதல் 6 மாதங்கள் வரை லைசென்ஸ் பிளாக் செய்யப்படும்.



வேறு ஊருக்கு மாறுதலாகி செல்பவர்கள் ஓட்டுனர் உரிமத்தை எப்படி புதிய

முகவரிக்கு மாற்றுவது





ஆன்லைனில் உங்கள் உரிம நகலை ஒப்பிட்டு பார்த்து உண்மையான உரிம நகல்தானா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சரி பார்ப்பார். அதன்பின் தற்போது வசிக்கும் முகவரி,ஆதார் , ரேஷன்கார்டு, இருப்பிடச் சான்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்து

விண்ணப்பித்தால் முகவரி மாற்றப்பட்ட புதிய உரிமம் பெறலாம்.



அசல் உரிமம் தொலைந்து போனால் புதிய உரிமம் எடுக்க முடியுமா





உங்கள் உரிமம் எப்போது எங்கு தொலைந்து போனது என்பதை குறிப்பிட்டு போலீஸ்

ஸ்டேஷனில் புகார் தர வேண்டும்.இந்த புகாருடன் தொலைந்துபோன உங்கள் உரிமத்தின்

நகலையும் இணைக்க வேண்டும். அவர்கள் அது உண்மைதானா என உறுதி செய்து கொண்டு தேடிப் பார்ப்பார்கள். கிடைக்கவில்லை என்றால் உங்களுக்கு 'நகல் உரிமம்' தர பரிந்துரை செய்வார்கள். அதன்பின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் நகல் உரிமம்

வழங்கப்படும்.



இந்தியாவில் இருந்து கொண்டு சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெறுவது

எப்படி





இந்தியாவில் உள்ள ஓட்டுனர் உரிமம் மற்ற நாடுகளில் செல்லாது. ஆனால் இந்தியாவில்

வழங்கப்படும் சர்வதேச ஓட்டுனர் உரிமம் மற்ற நாடுகளிலும் செல்லும். அந்த டிரைவிங் லைசென்ஸை இந்தியாவிலே பெற முடியும். அதற்கு குறைந்தது 6 மாதம் பாஸ்போட்டிற்கு வேலிடிட்டி இருக்க வேண்டும். நீங்கள் செல்லவிருக்கும் நாட்டிற்காக எடுக்கப்பட்ட விமான

டிக்கெட் மற்றும் விசா நகலையும் இணைக்க வேண்டும். இந்த லைசென்ஸ் இருந்தால் போதும்.

வெளிநாடு சென்றாலும் அங்கும் நீங்களே கார்களை டிரைவ் செய்து அந்நாட்டை சுற்றி

பார்க்கலாம்.


பெ.இளங்கோ



வட்டார போக்குவரத்து அலுவலர்,


விருதுநகர்.


95668 97171

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X