தனியார் மருத்துவமனையில் வாலிபர் சாவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:35

விழுப்புரம்:தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால், வாலிபர் இறந்ததாகக் கூறி உறவினர்கள் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


விழுப்புரம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதம், 29; விழுப்புரத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மதியம் மயக்கம் ஏற்பட்டதாக விழுப்புரம் நான்குமுனை சிக்னல் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றார்.அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பாலதண்டாயும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்த பாலதண்டாயுதம் உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இறந்ததாகக் கூறி, சிக்னல் அருகே மாலை 3:30 மணியளவில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.


விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, உறவினர்கள் கலைந்து சென்றனர். பின்னர், மாலை 4:00 மணியளவில், தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாலதண்டாயுதம் உறவினர்கள் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.எஸ்.பி., ஜெயக்குமார், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X