| பள்ளியை சேதப்படுத்திய காட்டு யானைகள் Dinamalar
பள்ளியை சேதப்படுத்திய காட்டு யானைகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:39

கூடலுார்:கூடலுார், மூலக்காடு அரசு பள்ளியை காட்டு யானைகள் மீண்டும் சேதப்படுத்தியது.கூடலுார், ஓவேலி மூலக்காடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த, 3ம் தேதி நள்ளிரவு பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானைகள், வகுப்பறைகள், பொருட்களை, சேதப்படுத்தியது. இதனால் பெற்றோர் அச்சத்துடன் குழந்தைகளுக்கு பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், நள்ளிரவு மீண்டும் பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானைகள், பள்ளி அறையின் கதவை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளன. வனத்துறையினர் அதனை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சம்பவத்தால், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.பெற்றோர் கூறுகையில், 'தொடர்ந்து காட்டுயானைகள் பள்ளியை சேதப்படுத்தி வருவதால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என, கூறினர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X