| குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: மூன்று பாதுகாப்பு மையம் Dinamalar
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: மூன்று பாதுகாப்பு மையம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:40

ஊட்டி:குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வதை தடுக்கும் நோக்கில், 3 குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆண்டு தோறும் நவ.,14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், ''நீலகிரியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வதை தடுக்கும் நோக்கில், 3 குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பிட்டுள்ளது. இது வரை, 3,200 அழைப்புகள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கவும், 3 தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது. 18 வயதுக்கு உப்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உட்பட எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக, 'சைல்டு லைன்' இலவச எண், 1098க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, குழந்தை பாதுகாப்பு குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது. எஸ்.பி., சசி மோகன், சைல்டு லைன் அமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X