| மாவட்ட மைய நுாலகத்தில் தேசிய நுாலக வாரவிழா Dinamalar
மாவட்ட மைய நுாலகத்தில் தேசிய நுாலக வாரவிழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 நவ
2019
05:41

ஊட்டி:மாவட்ட மைய நுாலகத்தில், 52வது தேசிய நுாலக வாரவிழா நடந்தது.பிரீக்ஸ் பள்ளி முதல்வர் சரவணன், நுாலகர் ரவி, மக்கள் சட்ட மைய நிறுவனர் வக்கீல் விஜயன் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்து பேசுகையில், ''நூல்கள் ஒரு மனிதனின் மனதை பக்குவப்படுத்துகிறது. படித்தல் என்பது ஒரு வித தியானம்.ஆழ்கடலில் மூழ்குகிறவர்கள் முத்தெடுப்பதை போல புத்தகத்தில் மூழ்குகிறவர்கள் அளப்பறிய ஆற்றலை பெறுவார்கள்.ஒவ்வொருவரது அழியாத செல்வமே வாசிப்பும், அதன் மூலம் கிடைக்கும் அறிவும் தான். ஒவ்வொரு புத்தகமும் தேவதைகள் சில தேவதைகள், 100 சிறகுகளை கொண்டிருக்கும், சில தேவதைகள், 1000 சிறகுகளை கொண்டிருக்கிறது,'' என்றார்.தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கவிதை போட்டி, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. நுாலகர் சிவாஜி, கணேசன், ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் பாண்டியன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X